Tuesday, March 8, 2011

வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;)

இந்தியா மானத்தை காப்பாத்த யாரையும் தலைகீழா சம்மர் அடிக்க சொல்லலீங்க.. கொஞ்சம் பருப்போட.. ச்ச.. பொருப்போட நடந்துகிட்டா போதும்..எல்லாரும் பெரும்பாலும் சம்பாதிக்க தாங்க போறது.. ஆனா அதுக்காக பிறந்து வளர்ந்த தாய் நாட்டு மானத்தை வாங்கனுமா?? இதெல்லாம் தப்புன்னு தெரியாமையும்,அதனோட முழு விளைவுகள் புரியாமையும் பல பேர் இத பண்ணிட்டு இருக்காங்க..

1. எல்லா கம்பெனி-லயும் வெளிநாட்ல நாம செஞ்ச செலவுக்கு பில் குடுத்தா அத திரும்ப குடுத்திருவாங்க.. இந்த பொய் கணக்குபுள்ளைங்க பண்ற மானங்கெட்ட வேலை இருக்கே..  நான் முதல் முதலில் இதனால வாங்கின செருப்படி.. அது அந்த நாட்டில் இருக்கும் ஒரு பிரபலமான இந்திய ஹோட்டல்.. ஒரு ஆபீஸ் பார்ட்டி-க்காக அந்த நாட்டு பசங்க சிலரும் நம்ம ஊரு கிங்கரர்களும் போயிருக்காங்க.. பில் நம்ம நாட்டு பணத்துல ஒரு நாற்பதாயிரம் வந்திருக்கும்.. ஆனா பில்லுக்கு பணம் குடுத்தது அந்த ஊர் பசங்க.. சரின்னு எல்லாரும் கெளம்பியாச்சு.. கொஞ்ச நேரத்துல கிங்கரர்கள் திரும்ப வந்து பில் காப்பி ஒன்னு கெடைக்குமான்னு கேட்டு வாங்கிட்டு போயிருக்காணுக.. என்ன ஈனப் பொழப்பு இதெல்லாம்!!

நான் அந்த ஹோட்டல்-க்கு சாப்பிட போனப்ப அந்த முதலாளி இந்தக் கதைய சொல்லிட்டு.. உங்களுக்கு கூட பில் ஏதும் அதிகமா வேணும்னா சொல்லுங்க இதெல்லாம் உங்க நாட்ல நடக்கறதுதானேன்னு சிரிச்சான்.. கேவலமா இருந்தது.. ஒரு நாற்பதாயிரம் ரூபாய்க்கு நாட்டையே வித்துட்டானுகளே.. அதுக்கு மேல அங்க ஒரு வாய் கூட சாப்பிட முடியல.. பில்லுக்கு பணம் குடுத்திட்டு "Not everybody from my country are cheap like that" அப்டின்னு வாங்கினதுக்கு கொஞ்சமேனும் திருப்பி குடுத்திட்டு கெளம்பிட்டேன்!!

2. வெளிநாட்ல பஸ், ட்ரெயின் எல்லாமே AC போட்ருக்கும்.. அதனால காற்றோட்டம் இருக்காது.. அந்த நேரத்துல உங்க வியர்வை மனம்கொண்ட அக்குளை கொண்டு போய் அந்த நாட்டுகாரங்களோட மூக்குல வெச்சா.. நாத்தம் புடிச்ச நாட்டுகார(ரி)ன்னு தான் சொல்லுவாங்க.. அதனால ஒரு நல்ல டியோடரன்ட் use பண்ணுங்க.. :))


3. தலைக்கு என்னை வெக்கறது நல்ல பழக்கம் தான்.. அதுக்காக ஒரு ஊருக்கே போடற அளவுக்கு வெச்சுட்டு போய் அடுத்தவன் டிரஸ்-ல எல்லாம் தேச்சுட்டு இருக்கக்கூடாது!!

4. Dutch Treat போகலாமான்னு கேட்டா.. Dutch Hotel-க்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தரப்போரான்னு, நாக்க தொங்க போட்டுட்டு போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு பில்-லுக்கு பணம் கேட்டா.. Treat-ன்னு சொல்லிட்டு மானங்கெட்டவன் பணம் கேக்கறான்னு அவன திட்டக்கூடாது.. Dutch treat-ன்னா பில் எவ்ளோ ஆனாலும் எல்லாரும் சமமா பிரிச்சு பணம் குடுக்கறதா இருக்கலாம்.. இல்லன்னா யார் எவ்ளோ சாப்டாங்களோ அதுக்கு அவங்களே பணம் குடுக்கணும்.. எதுன்னு சரியா தெரிஞ்சுட்டு போறது நல்லது!!


5. அந்த நாட்ல பப்ளிக்-ல உம்மா குடுக்கறது எல்லாம் சாதாரனமா இருக்கும்.. அதனால கொட்ட கொட்ட அதையே பாத்துட்டு இருக்கக்கூடாது.. லைட்டா ஓரக்கண்ல பாத்தும் பாக்காத மாதிரி போயிட்டே இருக்கணும்.. ;)))

அங்க வந்த நம்ம ஊர் ஜோடி ஒன்னு.. இத ட்ரை பண்ணிட்டு இருக்க.. நான் எதேச்சையா(சத்தியமாங்க) திரும்பி பார்க்க.. நான் பாத்தத அவங்க பாக்க..டப் டுப்புன்னு ரெண்டு பேரும் விலகி போக.. எல்லாருக்குமே ஒரே பப்பி ஷேம்.. நமக்கு தான் வரலியே.. அப்புறம் எதுக்கு இந்த வீண் விளம்பரம்.. இதெல்லாம் தேவையா மக்களே!!


6. நம்ம ஊர்ல ஆபீஸ் போயி காபி மொக்கை, லஞ்ச் மொக்கை, மதியம் டீ மொக்கை எல்லாம் போடற மாதிரி அந்த ஊர்ல பண்ணாதீங்க.. அவங்களுக்கு கலீக்ஸ் வேற நண்பர்கள் வேற.. அதனால வேலை நேரத்துல பேய் மாதிரி வேலைய மட்டும் பாத்துட்டு போயிகிட்டே இருப்பாங்க.. நடுல நீங்க போய் தேவை இல்லாம பேசினா தொந்தரவா தான் எடுத்துப்பாங்க.. சூதானமா இருக்கோணும்!!

 மற்றவை அடுத்த பகுதியில்.. இன்னும் மொக்கை முடியலையாடா சாமின்னு எல்லாம் சலிச்சுக்கப்பிடாது.. ஹி ஹி ஹி.. 

24 comments:

UFO said...

//"Not everybody from my country are cheap like that"//---that is there always... everywhere... anywhere... thanks

Iqbalselvanblog said...

அருமைப் பாஸ் !!! சூப்பரா சொன்னீங்க !! கனடா வந்த குஜராத்திப் பசங்க புதுசு ஊருக்கு ! ரெண்டு இந்திய வம்சாவளி ஜோடி உம்மாக் கொடுக்கிறதை முட்ட முட்டப் பார்த்தானுங்க.. .... கேவலமாய் தெரியவில்லையா??? உம்மாக் கொடுக்கிறதைச் சொல்லவில்லை. அதை அப்படி முட்டப் முட்டப் பார்க்கிறதைச் சொன்னேன் ....

Sriramnathan said...

1. apart from that not following Q system - anywhere..
2. Don't try to understand the basic behaviours like - talking over phone in public place, giving priorities to elders and childrens etc

Drpkandaswamy1935 said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

கீறிப்புள்ள!! said...

Thanks UFO for your comments.. True.. People may continue to do it.. Atleast others might be aware of it and not fall for it.. :))

கீறிப்புள்ள!! said...

ஹா ஹா ஹா.. கண்டிப்பா Iqbal.. கொடுத்தது நீங்க இல்லையே.. ஜஸ்ட் கிட்டிங் ;))

கீறிப்புள்ள!! said...

ரொம்ப சரியா சொன்னிங்க சார்.. ஏற்கனவே கொஞ்சம் நீலமா இருக்கற மாதிரி இருந்தது.. அதனால இன்னொரு ஆறு புள்ளிகள் அடுத்த பகுதியில சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்.. இவை அடுத்த பகுதியில்.. :))

கீறிப்புள்ள!! said...

நன்றிங்க கந்தசுவாமி!! :))

Cpsenthilkumar20 said...

நல்ல டீன் ஏஜின் இளமை துள்ளும் எழுத்துக்கள்

கீறிப்புள்ள!! said...

முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தலைவா.. :) மீண்டும் மீண்டும் வருக.. அப்புறம் எல்லாம் உங்கள மாதிரியானவங்க கிட்ட கத்துகிட்டதுதான்.. ஹி ஹி ஹி.. ;)

அருண்பிரபு said...

அருமை பாஸ்.... நல்லா சொல்லியிருக்கீங்க.

கீறிப்புள்ள!! said...

வருகைக்கும், வாசித்ததற்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க அருண்பிரபு!! :)

அப்பாவி தங்கமணி said...

// ஒரு நாற்பதாயிரம் ரூபாய்க்கு நாட்டையே வித்துட்டானுகளே.//

சாட்டை அடி...:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பயங்கரமா கீறிப்புட்டீங்களே கீறிப்புள்ள.....?

கீறிப்புள்ள!! said...

நன்றிகள் பல :))

கீறிப்புள்ள!! said...

வாங்க.. வாங்க.. பன்னிக்குட்டி ராம்சாமி வாங்க.. ஏற்கனவே வாங்கின நால பல பேர் பிரச்சனைல மாட்டிகிட்டாங்க என்னையும் மாட்டி விட பாக்கறயான்னு டவுட் வேணாம்.. ஹி ஹி ஹி.. ப்ளாக்-க்கு வரச்சொன்னேன்.. அவ்வளவே.. வருகைக்கு நன்றி.. :))

Shanmug said...

Mapla,

Sooper daa! ur blog is becoming popular huh! Nice keep going| I like the previous one "Evandi unnai pethan " too.

Cheers
Shanmug.K

கீறிப்புள்ள!! said...

Thanks மச்சி.. இப்போதைக்கு விடற மாதிரி இல்ல.. மொக்கைகள் கண்டிப்பாகத் தொடரும்..டரும்..ரும்..ம்..ஹி ஹி ஹி..

Sakthiselvi said...

அருமை ப்ரவீண் ::))

Sakthiselvi said...

நீ எப்போ இருந்து கீறிப்புள்ளையானாயோ????

கீறிப்புள்ள!! said...

நான் எப்போ முதல் கீறல் போட்டேனோ அன்றில் இருந்தே ஆகியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.. ஆனால் அதை உணர்ந்ததென்னவோ இரு தினங்களுக்கு முன் நான் நிஷ்டையில் இருந்தபோதுதான்.. ஹி ஹி ஹி..

Arul Kumar P அருள் குமார் P said...

இப்படி ஒரு பதிவு தேவை தான். நொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க . நடிகர் வடிவேலுக்கு தம்பியா நீங்க ...? உங்க பதிவு எல்லாத்தியும் பார்த்தேன் நொம்ப நல்லா இருக்குங்க.

Guna said...

உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணா

MARI The Great said...

நெத்தியடி ..!

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))